வடமாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, வாணிபம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்கள அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் மக்களினுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவிகளாக 15 மாதர் சங்க அமைப்புக்களுக்கு பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தின்பொழுது அமைச்சர் பா.டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோதராதலிங்கம், மன்னார் மாவட்ட அரச அதிபர், பொதுமக்கள் உள்ளிட்ட பல அதிதிகளும் கலந்துகொண்டு நிகழ்வில் சிறப்புரையாற்றுவதனையும் காணலாம்.