விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திகன, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நேற்று இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய பிரதேசவாசி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த கணவன் மனைவி இருவரும் திஹாரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், குறித்த பெண்ணின் கிராமத்திற்கு வந்திருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த கணவரின் வயது 28 எனவும் மனைவியின் வயது 22 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கிய பெண் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
அவளைக் காப்பாற்ற கணவனும் நீர்த்தேக்கத்தில் இறங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், வெள்ளத்தில் சிக்கி இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை காப்பாற்ற பிரதேசவாசி ஒருவரும் நீரில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்களைக் காப்பாற்றச் சென்ற கணவன் மற்றும் பிரதேசவாசியின் சடலம் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.