தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன்பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் கைகோர்த்தார். இப்படமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் அதிதி நடிப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே போல் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களிலும் அதிதி நடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
விக்ரம் மகள் திருமணத்தில் அதிதி
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் மற்றும் ஐ ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக சேர்ந்த பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதில் விக்ரமின் நண்பரும், இயக்குனருமான ஷங்கர் தனது மனைவி, மகள்கள் என குடும்பத்துடன் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட, ரசிகர்கள் பலரும் பார்த்திராத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, அந்த ஓரத்தில் நிற்கும் பெண்ணா அதிதி ஷங்கர், ஆள் அடையாளமே தெரியவில்லையே என்பது போல் இருக்கிறார்.