விக்ரம் 2 மற்றும் கைதி 2 படங்களில் கேமியோ ரோலில் தளபதி விஜய்.. என்னடா சொல்றீங்க

70

 

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளிவந்தது. இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என கூறப்படும் LCU-வில் இணைகிறது. ஆகையால் இனி வரும் LCU படங்களிலும் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்குள் அவர் இனிமேல் நான் படங்களில் நடிக்கமாட்டேன், அரசியலில் களமிறங்க போகிறேன் என கூறிவிட்டார். இதனால் விஜய் எப்படி LCU-வில் வருவார் என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கேமியோ ரோலில் தளபதி விஜய்
LCU-வில் இணையும் விக்ரம் 2 மற்றும் கைதி 2 படங்களில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. அதற்கான காட்சிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் எடுத்துவிட்டாராம். ஆம், லியோ படத்தின் படப்பிடிப்பின் போதே, விக்ரம் 2 மற்றும் கைதி 2 படத்திற்கு தேவையான காட்சிகளை விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் 2 மற்றும் கைதி 2 படங்களில் விஜய்யின் காட்சிகள் இடம்பெறும் என்ற தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படியொரு விஷயம் நடந்திருந்தால், அது கண்டிப்பாக செம மாஸாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் இது நடக்கிறதா என்று.

SHARE