விஜயகுமாரின் மகள் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

73

 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய வரிசைகள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா உள்ளிட்டோர் சினிமாவில் நடித்துள்ளனர்.

இதில் தற்போது அருண் விஜய் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக பயணித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், ரிக்ஷா மாமா எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதன்பின் 2002ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், மாதவனுடன் பிரியமான தோழி, ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற ரசிகர்களின் நினைவில் இருந்து நீங்கா படங்களை கொடுத்துள்ளார்.

திருமணம்
திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகை ஸ்ரீதேவி தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரூபிகா எனும் மகளும் உள்ளார். இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE