அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தன்னுடைய திரை பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். Goat படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், தன்னுடைய கடைசி திரைப்படமாக தளபதி 69 இருக்கும் என கூறியுள்ளார்.
ஆனால், இந்த கடைசி படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. சமீபத்தில் வந்த தகவலின்படி, தளபதி 69 அதாவது விஜய்யின் கடைசி படத்தை முன்னணி இயக்குனர் ஹெச். வினோத் தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், தளபதி 69 கண்டிப்பாக ஒரு அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தான் இருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.
இப்படி தான் இருக்கும்
இந்த நிலையில், விஜய்யுடன் படம் பண்ணால் எப்படிப்பட்ட படத்தை இயக்குவீர்கள், கதைக்களம் என்னவாக இருக்கும் என ஹெச். வினோத் இடம் கேள்வி எழுப்பியபோது, “எனக்கு அரசியல் தான். விஜய்யை வைத்து அரசியல் படம் பண்ணவேண்டும் என்பது தான் எனக்கு ஆசை. நான் அவருக்கு சொன்ன கதைகள் அனைத்திலும் அரசியல் இருக்கிறது” என கூறியுள்ளார்.
இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச். வினோத் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.