விஜய்யின் கோட் படம் குறித்து மேடையில் சூப்பர் தகவல் கொடுத்த பிரபல நடிகர்- என்ன விஷயம் பாருங்க

77

 

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

பல வருடங்களுக்கு சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கிவரும் விஜய் இப்போது 69வது படத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறியது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும் ரசிகர்கள் தளபதி மக்களுக்கு நல்லது செய்ய இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் நல்லது தான் என கொண்டாடி வருகிறார்கள். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிரேம்ஜி
இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தில் நடித்துவரும் பிரேம்ஜி தற்போது படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், படத்தில் இரண்டு தளபதி நடித்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் சும்மா அடிச்சி, துவம்சம் செய்துள்ளார், வேற லெவல்தான், சொல்ல வார்த்தையில்லை என்றும் அதை கண்ணால் ரசிகர்கள் பார்ப்பதை காண தான் வெயிட்டிங் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE