விஜய்யின் 63வது பட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

542

விஜய்யின் 63வது படம் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம். படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்க 16 பெண்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அவர்கள் யார் யார் என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி அவ்வப்போது செய்தி வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் விஜய் 63வது படப்பிடிப்பில் ரசிகர்கள் சூழ இருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அதை நம் தளத்திலும் பதிவு செய்திருந்தோம். தற்போது 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடப்பதாக கூறப்படுகிறது.

SHARE