விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்த இந்த சிறுமியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி இருக்கார் பாருங்க

83

 

பரதன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஸ்ரேயா நாயகியாக நடிக்க வெளியான இப்படம் நன்றாக ஓடியது, ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. இதில் விஜய்யுடன் ஒரு குட்டி குழந்தை நடித்திருந்தார்.

விஜய் மற்றும் அந்த குழந்தை இடம்பெறும் காட்சிகள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

லேட்டஸ்ட் க்ளிக்
விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதிதா.

அபுதாபியைச் சேர்ந்த இவர் மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்டோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தமிழில் அழகிய தமிழ்மகன் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

2009ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்காத நிவேதிதா கேரள மாநில விருது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நிவேதிதாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

SHARE