விஜய், அஜித், விக்ரம் நிராகரித்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. சூர்யா நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது

74

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், விக்ரம் மூவரும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படத்தை வேண்டாம் என கூறி நிராகரித்துள்ளனர்.

அப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது. இன்று வரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்களில் அப்படமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தானா
அப்படி விஜய், அஜித், விக்ரம் மூவரும் நிராகரித்து திரைப்படம் எது என்று தானே கேட்கிறீர்கள். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் தான் அது.

ஆம், இப்படத்தின் கதையை நடிகர்கள் விஜய், விக்ரம், அஜித் போன்றவர்களிடம் தான் முதன் முதலில் கவுதம் மேனன் கூறியுள்ளார். ஆனால், மூவரும் வெவ்வேறு காரணங்கள் கூறி இப்படத்தை நிராகரித்துள்ளனர்.

இதன்பின், ஜோதிகாவிடம் இந்த கதையை கூறி ஓகே செய்துள்ளார். ஜோதிகா தான், சூர்யாவை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என இயக்குனர் கவுதம் மேனனுக்கு கூறினாராம்.

SHARE