விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி, தேவைப்பட்டால் அவருடன் நிற்பேன்- பிரபல நடிகர்

133

 

நடிகர் விஜய், தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம்.

இவர் படம் வந்தாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும். கடைசியாக இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது.

அப்படம் மாபெரும் வெற்றியடைய விஜய் சூப்பராக வெற்றிவிழா ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு கோட் என பெயர் வைத்துள்ளனர், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும் என கூறப்படுகிறது.

பிரபலம்
விஜய் அண்மையில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டார். தான் அரசியலுக்கு வருவதாகவும், கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து சமுத்திரக்கனியிடம் கேட்டபோது, விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், தேவைப்பட்டால் அவருடன் கூட நிற்பேன் என கூறியுள்ளார்.

 

SHARE