விஜய் டிவிக்கு போட்டியாக புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. சரியான போட்டி

75

 

TRP ரேட்டிங்கில் விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் இடையே கடும் மோதல் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் எந்த தொலைக்காட்சியின் சீரியல்கள் டாப் 5 இடத்தை பிடிக்க போகிறது என எதிர்பார்ப்பு இருக்கும்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ஹாஹா கல்யாணம். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறதாம்.

புதிய சீரியல்
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹாஹா கல்யாணம் சீரியலுக்கு போட்டியாக கலாட்டா கல்யாணம் எனும் புதிய சீரியலை சன் டிவி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆம், கலாட்டா கல்யாணம் எனும் புதிய சீரியல் விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE