விஜய் மகனுடன் கைகோர்க்க ஆசைப்படும் 20 வயது விஜய் டிவி நடிகை.. யார் அந்த நடிகை தெரியுமா

102

 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், தற்போது விஜய்யுடைய மகனும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகராக இல்லாமல் தனது தாத்தாவை போல் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார் சஞ்சய். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என அறிவிக்கவில்லை.

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. நடன நிகழ்ச்சி, மௌனராகம் சீரியல், பிக் பாஸ், குக் வித் கோமாளி என தொடர்ந்து விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்.

விஜய் டிவி நடிகையின் ஆசை
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் சார் மகன் இயக்கத்தில் ஹீரோயினா நடிக்க போறீங்கன்னு போட்டி ஒன்றில் கூறியது பற்றி ரவீனாவிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ரவீனா “ஐயா, அந்த வீடியோதிருப்பவும் பாருங்க, எந்த நடிகருடன் நடிக்க ஆசைன்னு கேட்டாங்க, விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை, ஆனா அவருடன் நடிக்க முடியுமான்னு தெரியல, அவர் பையன் கூடயாவது நடிக்க முடியுமான்னு பார்ப்போம் என்று தான் நான் கூறினேன். தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்க” என நகைச்சுவையாக பேசினார்.

SHARE