விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட மௌனிப்பும் உலக வல்லரசுகளின் பிடிக்குள் இலங்கை அரசும்

611

இன்றைய கால சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டு என்பது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசுடன் ஆரம்பித்ததொன்றாகும். இவ் செயற்பாடுகள் இன்று எதனை கூற நிற்கின்றன? கொரோனா வைரஸினுடைய தாக்கம் என்பது உலகளவில் 17 இலட்சத்திற்கு மேல் உயிர்களை காவு கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவர்கள் இதில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,299 ஆகவும் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 7,766 ஆகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆகவும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆகவும் காணப்படுகின்றது.
அரசியல் ரீதியாக இன்றைய பூகோள நிலைப்பாடு என்பது வர்த்தக ரீதியான அணுகுமுறையும் சர்வதிகார நிலைப்பாடும் என்பதாகும்.

குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை அபிவிருத்தியடையவிடாது அவர்களை தமது பொருளாதார வலைக்குள் சிக்க வைப்பதே இவர்களுடைய பிரதான நோக்கம். பொருளாதார ரீதியாக ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தால் அந்த நாடு உலகளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தியை அடைந்துவிடும். ஆகவே அபிவிருத்தியடைந்த நாடுகள் இவ்வாறு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை புறக்கணிப்பதும் அங்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதும் யுத்த சூழ்நிலைகளை உருவாக்குவதும் போன்ற விடயங்களையே இவர்கள் மேற்கொள்கிறார்கள். உலக வல்லரசுகளில் அமெரிக்காவா சீனாவா என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றமையினாலேயே தான் வல்லரசு என்று உலகளாவிய ரீதியில் நிரூபித்து காட்டுகின்ற ஒரு செயற்பாடாகவே சீன அரசாங்கம் இந்த கொரோனா வைரஸை வுகான் நகரில் முதலில் பரப்பியது. அந்த பிரதேசத்தில் அதனுடைய வீரியம் தாங்கள் நினைத்தவாறு வெற்றியடைந்தமையினால் அதை உலக நாடுகள் முழுவதுக்கும் பரப்பி தம்முடைய வியாபாரத்தையும் சர்வதிகாரத்தையும் நிலைநாட்டுகின்ற ஒரு செயல் வடிவமாக சீனா அரசு பூகோள அரசியலாக இதனை மாற்றியுள்ளது. கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு வியாபாரத்தையே இந்த கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மாஸ்க், வென்டிலேட்டர், தடுப்பூசி, கொரோனா தடுப்பு அங்கிகள் போன்றவற்றை தயாரித்து பீ.சி.ஆர் பரிசோதனைப் பொருட்கள் போன்றவற்றையும் சந்தைப்படுத்தி ஏனைய நாடுகளைவிட முன்னேற்றத்தை கண்டுள்ளது. எந்தவொரு நாடுகளும் ஒரு இரசாயனத்தை கண்டு பிடித்தால் அந்த இரசாயனத்திற்கு எதிரானதொன்றை கண்டுபிடித்ததன் பின்னரே குறித்த இரசாயனத்தையோ அல்லது அந்த வைரஸையோ பரப்பிவிடும். அப்பொழுது குறித்த கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள் கடந்து செல்வதற்கு முன்னர் இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் தற்பாதுகாப்பு தடுப்பூசிகள் பலவற்றையும் மருத்துவ வியாபார சந்தையில் சீன அரசாங்கம் விற்றுவிடும்.
ஆகவே குறித்த நாடுகள் சீன அரசாங்கத்திடம் குறித்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதுவே தற்பொழுது நடைமுறையிலும் உள்ளன. சீன நாட்டை எதிர்க்கும் அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரெல் போன்ற நாடுகள் முன்வருவார்களா என்பது கேள்விக்குறி. ஆனால் அமெரிக்கா திட்டமிட்டு சீனா மீது ஒரு போரை தொடுத்தால் அதற்கு ஆதரவாக பல நாடுகள் தமது பங்களிப்பை வழங்கும். இன்று உலகளாவிய ரீதியில் சீன நாட்டை எதிர்க்க எந்தவொரு நாடும் அந்த தகுதியை இழந்துள்ளது. பொருளாதார ரீதுpயில் பல்வேறு நாடுகளில் தமது வர்த்தகத்தை சீன நாடு நிலைஊன்றியுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் தலைநகர்களை எடுத்துக்கொண்டாலும் அங்|கு சீன கொலனியாகவே காட்சியளிக்கும். அந்தளவு தூரம் டிஜிட்டல் வேல்ட் வளர்ச்சியடைந்துள்ளது எனலாம். குறிப்பாக இலங்கையை மையப்படுத்தி தாமரைத் தடடிhகம் ஒன்று சீன நாட்டால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை விமான நிலையத்திற்கு வந்திறங்கும் போதும் அல்லது இலங்கையின் ஏனைய இடங்களிற்கு வருகை தந்திறங்கும் போதும் தாமரை தாடகத்தின் உச்சி தெரியும். அந்த தாமரை தடாகத்தினை ஒரு சிலபேரை தவிர வேறு யாரும் அந்த பெயரால் அழைப்பதில்லை. சீன டவர் என்றே அழைப்பர். அந்தளவிற்கு அந்த பெயர் அழுத்தம் பெற்றிருக்கின்றது. இவ்வாறு ஆசிய ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் சீன ஆக்கிரமிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆகவே சீன பொருளாதாரம் என்பது ஆயுத ரீதியாகவும் பொருட்கள் ரீதியாகவும் இரசாயன ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் கட்டுமான ரீதியாகவும் உலகளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றிருப்பதனால் எதிர்வரும் காலங்களில் அதனை அசைக்கமுடியாத சூழ்நிலை உருவாகும். குறிப்பாக பெருந்தெருக்கள் பாலங்கள் கொண்ட நாட்டில் இல்லை என்று கண்டால் அதனை ஆயிரம் கிலோ மீற்றர் அல்லது ஐயாயிரம் கிலோ மீற்றர் வரையும் அமைக்க கூடிய திறன் கொண்ட நாடாக சீனா விளங்குகின்றது. மேம்பாலம் நீருக்கடியில் புகையிரதப்பாதை போன்றவைகளும் சர்வதேச ரீதியாக இடம் பிடித்தவையே. குறிப்பாக இலங்கையை பொருத்தவரை 30 வருட காலங்கள் நீண்ட யுத்தம் இடம் பெற்றது. இந்த யுத்தத்திலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மீட்சி பெறவில்லை. அதற்குள் கொரோனா வைரசினுடைய தாக்கம் இரண்டாம் அலையோடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை இலங்கை அரசு கட்டுப்படுத்துவதற்கு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்பொழுது சீனா நாட்டின் உதவியையே நம்பி சுற்றுலாவை திறந்துவிட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசினுடைய தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனோடு கூட அமெரிக்காவும் இந்தியாவும் சீன நாட்டை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் முதலீடு என்பது அதனை கணக்கீடு செய்ய முடியாதுள்ளது. கோல்பேஸ் கடல் பரப்பையே விலைக்கு வாங்கியுள்ளது என்றே கூற வேண்டும். கொழும்பு தலை நகரம் சீனா மயமாக்கம் என்றே கூறலாம். இனிவரும் காலங்களில் ஆயுதங்களை கொண்டு போரிடம்பெறும் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் இரசாயனங்களை பயன்படுத்தி குறித்த நாடுகளை அழிக்கும் செயல்திட்டத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள் செயற்படும். இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்றால் கிராமிய மட்டத்திலும் நாடு தழுவிய ரீதியிலும் பொருளாதார உற்பத்திகளை மெற்கொள்ள வேண்டும். விவசாயத்தை ஊக்குவிப்பதனூடாக அந்நிய நாடுகளுக்கு அடிபணியாது வடகிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது சிவில் நிர்வாகத்தை 30 வருடங்கள் வைத்திருந்த காலகட்டத்தில் எந்தவொரு அந்நிய நாடுகளின் சக்திகளும் இந்த நாட்டுக்குள் வருவது தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே தான் குறித்த நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் நிலை கொண்டிருந்தால் தங்களுடைய இப்படிப்பட்ட நாசகார வேலைகளை செய்ய முடியாது என்ற காரணத்தினால் இந்தியா சீனா அமெரிக்கா உட்பட 57 நாடுகள் இணைந்து போரிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தை மௌனிக்க செய்தார்கள். அதனுடைய விளைவை இன்று அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது எனலாம். 58 பயங்கரவாத நாடுகளும் தமிழீழவிடுதலைப்புலிகள் ஒரு இனத்துக்காக போராடியவர்கள் என்பது சர்வதேசம் அறிந்த உண்மை. இதற்கு உதாரணமாக 14 உள்ளுர் பேச்சுவார்த்தைகள் 7 சர்வதேச பேச்சுவார்த்தைகளும் 2004 ஆம் ஆண்டு சமாதான காலகட்டத்தில் இடம்பெற்றிருந்தது என்பது வரலாற்று உண்மை. உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் தேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்ததும் ஒரு சாதனையாகும். எந்தவொரு தலைவருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு கொண்டவராகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்தை வழிநடத்தி சென்றார் என்பது நிதர்சனமான உண்மை.
ஆகவே இந்த நாடு சுபீட்சமான இன நிலைமையை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த ஆண்டில் தனிப்பெரும் சக்தியாக மாற்றம் பெற வேண்டும். சீன காலணித்துவத்தை விரட்டியடிப்பதனூடாக இலங்கை நாடு இந்த பூகோள அரசியலில் இருந்து மாற்றம் பெற்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றாக திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய யதார்த்த பூர்வமான உண்மை.

SHARE