விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா. வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் நடந்துள்ளது.
பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படம் முழுமையாக வெளியிடப்பட வில்லை. சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார்.
இந்நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படும் சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.
இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது.