BBC ஆனந்தி அக்கா காலமானார்.
திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.




ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார்.
பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார்.
அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார்.
விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத்துறையில் குறிப்பாக வானொலித்துறையில் அவர் ஆற்றிய பணி மகத்தானது.
அவரது மறைவுக்கு தினப்புயல் ஊடகநிறுவனம் பத்திரிகை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.