விடுதலைப் போராட்ட இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் EPRLF வவுனியாவில் சிவகரனுக்கு மேடை அமைத்துக் கொடுத்ததா?

304

வவுனியாவில் தமிழ் தேசிய விடுதலைக்   கூட்டமைப்பின், EPRLF கட்சியினால் கலை மகள் விளையாட்டரங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் அவர்கள் கட்சி விட்டு கட்சி தாவி விடுதலைப்போராட்ட இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அநாகரிகமான முறையில்  மேடையில் ஆற்றிய உரைக்கு வடகிழக்கு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற ஆயுதப்போராட்ட இயக்கங்களின் தலைவர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.    வவுனியாவில் தமிழ் தேசிய விடுதலைக்                                              கூட்டமைப்பின், EPRLF கட்சியினால் கலைமகள் விளையாட்டரங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் அவர்கள் கட்சி விட்டு கட்சி தாவி விடுதலைப்போராட்ட இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அநாகரிகமான முறையில்  மேடையில் ஆற்றிய உரைக்கு வடகிழக்கு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற ஆயுதப்போராட்ட இயக்கங்களின் தலைவர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.  அதிலும் குறிப்பாக ரெலோ, புளொட் கட்சிகள்  கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற வற்றை மேற்கொண்டனர் என அவரால் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர் EPRLF மண்டையன் குழுத் தலைவர் செய்த தவறுகளை அம்மேடையில் சுட்டிக்காட்டவில்லை. பதிலாக ரெலோவும், புளொட்டும் யோக்கியவான்களா? எனக் கேட்டார். அப்படியாயின் EPRLF கட்சியையும் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவேண்டும். இச்சம்பவம் மாவை சேனாதிராஜா அவர்களால் திட்டமிட்டு குழப்பும் நோக்கில் சிவகரன் அவர்கள் EPRLF கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளாரா? என பலராலும் சந்தேகிக்கப்படுகிறது.

சிவகரன்  EPRLF கட்சியோடு இணைந்து போட்டியிடுவதாக இருந்தால் மண்டையோட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என்பது மக்களின் விமர்சனம். அஹிம்சை வழியில் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தை அவமதிக்கும் செயலாகவே இதனைக் கருத முடிகிறது.   கடந்த காலத்தில் சிவகரன் அவர்கள் ஆனந்தசங்கரி அவர்களை துரோகி   எனப்பேசியவர். தமிழரசுக்கட்சியில் இருந்து கொண்டு ஏனைய ஆயுதக்கட்சிகளை தகாத வார்த்தைகளால் திட்டியவர். இவரைத் தமிழரசுக்கட்சியில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் அன்று இந்திய இராணுவத்தோடு இணைந்து பல படுகொலைகளை மேற்கொண்ட EPRLF கட்சிக்காக ஆதரவு தெரிவிக்கின்றார். உண்மையில் ஆயுதப்போராட்டங்கள் சகோதரப்   படுகொலைகளாக தோற்றம் பெற்றதனாலேயே விடுதலைப்புலிகள் ரெலோ, புளொட், EPRLF போன்ற கட்சிகள் ஒன்றாக பயணிக்கமுடியவில்லை. காலப்போக்கில் இந்நிலை மாற்றப்பட்டு கூட்டமைப்பு என ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் இவர்களை துரோகிகள் எனக் குறிப்பிடுவதை ஏற்கமுடியாது.

மாற்றுத்தலைமை குறித்து குறிப்பிடும் சிவகரன் யாரை மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர் எனக் கூறுகிறார்.  அன்றே விடுதலைப்புலிகளை ஏக பிரதி                                  நிதிகளாக ஏற்காத ஆனந்த சங்கரியையா அல்லது EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ் அவர்களையா அல்லது கஜேந்திரகுமார் அவர்களையா. இந்த மூவரும் உண்மையில் ஒன்றாக பயணிக்காமல் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவர்கள். தமிழரசுக்கட்சி தவிர்ந்த ரெலோ, புளொட், EPRLF போன்றன முதல்வர் விக்னேஸ்வரனைத் தலைமையாகக்கொண்டு செயற்படுவதாகவே நிலைமைகள் இருந்தது. (இச்சம்பவம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கூட எம்மிடம் இருக்கின்றன. ஆனால் ஊடக தர்தம் கருதி இவற்றை நாம் வெளியிடவில்லை) அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலோ, புளொட், EPRLF, கஜேந்திரகுமார் போன்றோர் நாரதர் வேலையை  செய்யத் தொடங்கினர். அதன் காரணமாகவே ரெலோ, புளொட், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றன வெளியேறினர்.  இது தான் உண்மை. அந்த நேரத்தில் தலைமையை உருவாக்கியிருக்க முடியும். இன்று சிவகரன் கொக்கரிப்பதில் நியாயம் இல்லை. இவர் தமிழரசுக்கட்சியின் அடிவருடி என்பது யாவருக்கும் தெரியும். இவருக்கு மேடைப்பேச்சு  வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஆழமாக இதுபற்றி சிந்தித்திருக்கவேண்டும். குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று EPRLFஇன் வெற்றி சிவகரன் அவர்களால் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. த.தே.கூட்டமைப்புக்குள் இருந்து    குழிபறிப்பவர்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் தான் துரோகிகள். குறிப்பாக கட்சி தாவியவர்கள். சரி, தவறுக்கு அப்பால் இந்த ஆயுதப்போராட்ட இயக்கங்கள் போராட்டத்தை கட்டியெழுப்புவதற்காக எத்தனை தடைகள் தாண்டி வந்தார்கள் என்பதை சற்று சுருக்கமாக பார்ப்பது காலத்தின் தேவை. அத் தலைவர்களின் வரலாறுகளை திரும்பிப்பார்ப்பது காலத்தின் கட்டாயம்.

அவ்வாறாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ((Appapillai Amirthalingam, ஓகஸ்ட் 26, 1927 – ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண் ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப் பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தார். பண்ணாகம் மெய் கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி யையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரி   யில் (1936-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951இல் பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்.  1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கை பாராளுமன்றம் சென்றார்.

இலங்கையில் தமிழர்  உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமி ழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமி ழர் அமிர்தலிங்கம் ஆவார். இதேபோன்று இன்று இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை பாராளுமன்றில் பதவி வகிப்பது என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

எழுபதுகளின் இறுதியிலும், என்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப்போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18ஆவது அகவையில் பிரபா கரன் தொடங்கினார்.  மே 5, 1976இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலை வராக மதிக்கிறார்கள், இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் பயங்கரவாதியல்ல. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ.பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.

அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப் பட்டார். பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணி களான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார். ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்தபோதே அவர்களால் அறிந்துகொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை. தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து உரிமைகளுக்காக இறுதிவரை போராடினார். இவரது போராட்டம் உலக நாடுகளை வரை எட்டியது. பிற்காலத்தில் உலக நாடுகள், அரசுடன் பேச்சுக்களை நடாத்தி தமிழர்களுக்கான தீர்வினை வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக ஊடகவியலாளர் சிவராமுடன் இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கினார். அது இன்று எதிர்க்கட்சியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

க.உமாமகேஸ்வரன்  தமிழீழ மக்களின் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். 1976ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர். உமாமகேஸ்வரன் 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய் பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப் பட்டார். இலங்கை நில அளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமா                                     மகேஸ்வரன் தமி ழர்  விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளரா கவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.

இக்காலகட்டத்தில் அவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் மாத்திரமன்றி சிறு   சிறு குழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர். 1975 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), புதிய புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார்.அவர்களுக்கான வெளியுலகத்                                தொடர்புகள் உட்பட பல்வேறு தேவை களையும் கொழும்பில் இருந்தவாறே மேற் கொண்டிருந்தார்.

பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கை யூடாகவே போராட்டப் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்று 1972ல் ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் தமிழீழ விடுத லைப் புலிகள் என்று 1976ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினது தொடக்க கட்ட தலைவராக உமாமகேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்பட்டார்.  தமிழ் மக்கள் விடுதலை முன்னணி (People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) என்ற ஈழப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் காரணமாக வவுனியாவின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று   புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People’s Revolution ary Liberation Front – EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர்    நாயகம் க.பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவி யுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கி                               யத்துவம் கொடுக் கப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண                                  சபையின் முதலமைச்சராக அ.வரதராஜப் பெருமாள்  ஆக்கப் பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகை யிலான செயல்பாடுகள் எதுவும் நடை பெறவில்லை.  ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர். 2001ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டனர். ஆனால் தற்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செயற்படுகின்றனர். இதுவே இவ் ஆயுதக்கட்சிகளின் சுருக்கமான வரலாறு. இவர்களை நாம் துரோகிகள் எனக்கூறுவது தற்காலத்தில் பொருத்தமற்றது. தேசியத் தலை வர் அவர்களால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எனினும் சிவகரன் அவர்களது உரையா னது மொத்தத்தில் ஆயுதக்கட்சிகளுக்கு ஆப்பு வைக்கும் விடயமாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணியன்

SHARE