பதுளை – பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இளம் ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் பதுளை – லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணாவார்.
இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விடுதிக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை
இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர் மீண்டும் பாடசாலைக்கு திரும்பாததால் அவருடன் கடமையாற்றும் ஏனைய ஆசிரியைகள் குறித்த விடுதிக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.