உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சுங் நிறுவனம் அடுத்த வருட ஆரம்பத்தில் Samsung Galaxy J3 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280×720 Pixel Resolution உடைய தொடுதிரை, Octa Core Qualcomm Snapdragon 430 Processor என்பவற்றினைக் கொண்டுள்ளது.
அத்துடன் பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Android Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2600 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியினை அடுத்த வருடம் ஜனவரி 6ம் திகதி அளவில் அறிமுகம் செய்ய சாம்சுங் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
எனினும் இக்கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.