விண்ணில் இன்று பாய்ந்த ’ஷெங்ஸோ-11’ 

192

விண்வெளியில் நிரந்தரமான ஒரு ஆய்வு நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள சீனா, இன்று (அக்டோபர் -17) காலை ’ஷெங்ஸோ- 11’ என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியுள்ளது.

இந்த விண்கலம் அவர்களுடைய திட்டத்தை நிறைவேற்ற செலுத்தப்பட்டுள்ள இரண்டாவது விண்கலமாகும்.

இது, வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங், ஹெய்பெங் என்ற இரு விஞ்ஞானிகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் சுமார் ஒரு மாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

கடந்த 2013 ல், இந்த நோக்கத்திற்காக 3 சீன விஞ்ஞானிகளுடன் ’டியாங்காங்-1” என்ற விண்கலம் அனுப்பியது. அவர்கள் 15 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை முடித்து வெற்றிகரமாக திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE