விண்வெளியில் உள்ளவர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் பேசுகிறார் ஜுக்கர்பெக்

291

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)

தகவல் தொடர்புத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் செயலி மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக்உரையாடவுள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள டிம் கோப்ரா, ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் டிம் பீக் ஆகிய விண்வெளி வீரர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் மார்க் ஜுக்கர்பக் வருகிற ஜூன் 1-ல்உரையாட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வினை நாசா மையத்தின் பேஸ்புக் பக்கத்தின் மூலம் உலக மக்கள் கண்டுகளிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்புத் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, விண்வெளியில் உள்ள வீரர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE