விண்வெளியில் ஐந்து சூப்பர்ஸ்டார்

365
விண்வெளியில் வேறு பால்வெளி அண்டங்களில் புதிதாக ஐந்து பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஸ்பிட்ஸர், ஹப்பிள் தொலைநோக்கிகளால் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த போது இந்த பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகள் அதிக அளவிலான ரசாயன தனிமங்களை வெளியிடுகின்றது.

அதுமட்டுமின்றி மிக அதிகளவு ஒளியை உமிழக்கூடிய  எடா கரினே நட்சத்திரத்தை போன்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எடா கரினே என்ற நட்சத்திரம் பூமியிலிருந்து 10 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE