விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

792

 

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.

1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.

ஆண் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.

குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.

குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.

SHARE