வினாடிக்கு 16 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் விண்வெளி ஓடம்

185

மனிதன் வேகமாக முன்னேறி வருகிறான். மனிதன் தனது முன்னேற்றத்தின் போது வேகமாக செல்லும் வாகனங்களை அதிகமாக விரும்புகிறான்.

எனினும் அந்த வாகனங்கள் செல்ல வேக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சாதாரணமாக வீதியில் 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியும். அந்த வேகத்தை மீறி செல்ல தடைகள் இருக்கின்றன.

எவ்வாறாயினும் மனித ஒளி ஆண்டுகள் வேகத்தை மீறி செல்ல முயற்சித்தாலும் அவனால் அதனை நெருங்க முடியவில்லை.

எனினும் வினாடிக்கு 16 கிலோ மீற்றல் வேகத்தில் செல்லும் விண்வெளி ஓடம் இருக்கின்றது என்றால், அதனை யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் உண்மையாக அப்படியான விண்வெளி ஓடம் இருக்கின்றது.

அமெரிக்காவின் நாஸா நிறுவனம் புளுட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய நிவ் ஹொரைசன் என்ற விண்வெளி ஓடம் வினாடிக்கு 16 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து கொண்டிருக்கின்றது.

உதாரணமாக இந்த வேகமானது கொழும்பு கோட்டையில் இருந்து மொரட்டுவைக்கு ஒரு வினாடியில் செல்லக் கூடிய வேகமாகும்.

இதுவரை மனிதன் உருவாக்கிய விண்வெளி ஓடங்களில் மிகவும் வேகமாக செல்லும் இந்த ஓடம் மணிக்கு 50 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி கோப் கெனரல் என்ற இடத்தில் இருந்து இந்த ஓடம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்வெளி ஓடம் 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு இலக்குகளை தாண்டி சூரியனுக்கு அருகில் பயணிக்க உள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE