சீறி விழுகிறார்கள் சில அரசியல்வாதிகள்! ஆத்திரப்படுகிறார்கள் சில ஆத்திகவாதிகள்! பாய்ந்து விழுகின்றனர் பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தினர்!
அரசியல் கட்சிகளின் அந்த வரிசையில் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களாம்.
புதிராக இருக்கிறதா? ஆந்திர மாநிலம் திருப்பதியில் தான் இந்தக் களேபரம்! முண்டாசு கட்டி முண்டா தட்டி எழுந்திருக்கின்றனர்.
எதற்கு? அப்படி என்ன நடந்து விட்டது?
ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கூறிய ஓர் உண்மைத் தகவலுக்காகத்தான் இத்தனைக் கூத்துகளும்!
அப்படி என்னதான் அவர் கூறிவிட்டார்? அம்மாநிலத்தில் எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியான ஆர்.வி. சந்திரவதனன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
`திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி., கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008 பக்கம்
17) மேலும் கூறுகிறது.
திருப்பதி நகரில் மட்டும் 3500 அழகிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி. சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்திர மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரிய வில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத் தான் செய்துள்ளார் அவர் ஒன்றும் இந்துமத விரோதியும் அல்ல.
ஓர் உண்மையை சொல்லியதற்காக அவரைப் பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு உயர் அதிகாரிமீது பாய்ந்து பிராண் டுவதில் பக்தியிருக்கலாமே தவிர – பகுத்தறிவு இல்லை.
பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரப் பூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம்.
ருயீ வநஅயீடந வடிறளே ரனேநச ஹஐனுளு வாசநயவ என்ற தலைப்பில் `தி பயோனீர் ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.
சுவிட்சர்லாந்து அரசின் சார்பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள `புனித கோயில் கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளன.
ரிஷிகேஷில் 28 பேர்களும் காசியில் 11 பேர்களும் அலகா பாத்தில் 19 பேர்களும், லக் னோவில் 16 பேர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந் தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சென்னையில் 12,13.6.1976 ஆகிய இரு நாள்களிலும் பாலியல் நோய்பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னைப் பொது மருத்துவ மனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என். சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல் புண்ணி யதலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப் படுத்தக் கூடியதாகும்.
`பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணிய ஸ்தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரம்மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்த நோய் பரவுகிறது என்று சொன்னாரே சென்னை பொது மருத்துவமனையின் பிரபல மருத்துவரே கூறினாரே – நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
இந்து மதக் கடவுள்கள் செய்யாத லீலைகளா? கற்பழிப்பு என்பது கடவுள்களிடத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!
நாரதர் என்ற ஆண் கடவுளும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து 60 பிள்ளைகள் பெற்றனர் என்று கூறும் இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் – திருப் பதியில் விபச்சாரம் பெருகு வதாகப் புள்ளி விவரத்துடன் கூறிய தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு அதிகாரியைக் காய்தலில் பொருளில்லை.
காய்தல், உவத்தலின்றி உண்மையை உணர்ந்து, புண்ணியத்தலங்கள் என்றால் ஒழுக்கச் சீர்கேடுகளின் உறைவிடம் என்பதை உணர்ந்து திருந்துதல் – திருத்துதல் என்ற நிலைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம்.
ஒழுக்கத்துக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்?
`ஆனந்த விகடனே சாட்சி!
புண்ணியதலமான திருப்பதி திருமலையில் விபச்சாரம் என்று சொல்லலாமா? அபச்சாரம் அபச்சாரம் என்று புலம்பும் பக்தர்களே! `ஆனந்த விகடன் வெளியிட்ட இந்தச் செய்திக்கு என்ன பதில்
“சட்டென்று திடுக்கிட்டு “திருப்பதியில் நடந்த கொடுமையை பார்த்தியா? என்றாள் சுமதி.
“திருப்பதியில் என்ன நடந்தது…?
“திருப்பதிக்குச் சாமி கும்பிட வர்ற காதல் ஜோடிகளை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னாபின்னாப்படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்.. – சுமதி.
அடப்பாவமே…
`விடுதியில் இருந்த அந்த ஜோடியில் பையனை ஏதோ காரணம் சொல்லி அனுப்பிட்டு, அந்தப் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கற்பழிச்சிருங்காங்க. பிறகு, அந்தப் பெண்ணையும் வெளியே துரத்திட்டாங்க. பையன் ஒரு பக்கமுமா பொண்ணு ஒரு பக்கமுமா ஒருத்தரை ஒருத்தர் திருப்பதி மலையில தேடி அலைஞ்சு, கடைசியா ஒண்ணு சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்திருக்காங்க. இப்போ அந்த ரெண்டு ஊழியர்களையும் கைது பண்ணியிருக்கு போலீஸ்… என்றாள் சுமதி
`அடக் கொடுமையே! புனிதமான மலையில் இப்படி சில புல்லுருவிகளா? காதல் ஜோடின்னா யாருக்கும் தெரியாம வந்திருப் பாங்க. விஷயத்தை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு நினைச் சுட்டாங்க போல…
தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள்ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை),தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19),கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.
தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.
1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.
பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.
இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த “பஜார் பள்ளி”க்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007)நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.
அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி,நாகூர் மீரான்.
உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். “தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்”எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.
அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.
தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, “இதுவே இறுதி அல்ல,விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்” என்றார் துணைக் கண்காணிப்பாளர்.
இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, “இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்” என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.
ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?
“பயங்கரவாதம்‘ எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.
முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.
சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.
இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.
மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும்,ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது.
இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.
அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். – இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு – சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?
சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை – உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
கண்மூடி கண் திறப்பதற்குள்ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் – இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!
இந்து மக்களே உஷார்! நம் ஹிந்து இயக்கங்கள் நம்மை காப்பதாக கூறிக்கொண்டு மதவெறியை போதித்து நம் ஹிந்து மதத்திற்கே கேவலத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள். நம் வேதம் சொன்ன வழியில் சென்றால் நமக்கு வெற்றி கிட்டும், இப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ? குமார் பாண்டியன் சகோதரர்கள் போல் அழிவுதான் மிச்சமாக கிடைக்கும், தாங்களாகவே வெடிகுண்டு தயாரிப்பதும் அதனை வெடிக்கச் செய்வதும் அதில் தாங்களே மாட்டிக் கொள்வதுமாக செல்கிறது.
ஆக தெங்காசி மதக்கலவரத்தில் குமார் பாண்டியன் சகோதரர்கள்தான் முக்கிய குற்றவாளிகள், அவர்கள் முஸ்லிம்களை தாக்கும் எண்ணத்தில்தான் சென்றிருக்கிறார்கள், ஆனால் முஸ்லிம்கள் பதிலுக்கு தாக்கியதால் அங்கேயே இறந்துவிட்டனர் என்பது நன்றாக தெரிகிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ. விபரங்களை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.
சி.பி.ஐ., இந்த லஞ்ச விவகாரத்தில் லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சம்மன் அனுப்பியது. கைதாவதை தடுக்க லட்சுமி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, மனுதாரர்கள் 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இப்படியே சாமியார்கள் என்ற பெயரில் செக்ஸ் புகார்களும், லஞ்ச பின்னனியும், கொலைக் குற்றமும், வரி ஏய்ப்பும், நில அபகரிப்பும் பெருகி கொண்டே சென்றால், பராசக்தி பட வசனம் போல், கோவில்கள் கொல்லையடிக்கும், கொலைக் கூடாரங்களாக மாறிவிடும் போலிருக்கிறது.
கருவறைகளை படுக்கை அறைகளாக மாற்றிய காஞ்சி சுவாமிகள் தேவநாதன், சங்கராச்சாரியார் நித்தியானந்தா போன்றோரை இன்னும் வழிபடும் மக்கள் உள்ளனர். அரசியல் வாதிகள் போல் தங்கள் வாரிசுகளை நியமிக்கும் நிலை மேல் மருவத்தூர் போன்ற பங்காரு அடிகளார் செய்கின்றனர்.
பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, நாம் ஏமாறவும் அளவில்லை. ஆக மொத்தத்தில் போலி பக்தி பரப்பி காசு பறிக்கும் தந்திரத்தை ஹிந்து சாமியார்கள் கண்டு கொண்டார்கள். நிவாரணம் கிடைக்கும் என்று செல்லும் பக்தைகளை நிர்வாணம் படுத்துகிறார்கள்.
தீர்வு தேடி செல்பவர்களிடம் காசு பறித்து தேவைக்கு அதிகமாக சொத்தும் சேர்த்து கொள்கிறார்கள், இந்து மக்களே உஷார், இவர்களை போன்றோரை அம்பலப்படுத்தவோ அல்லது விரட்டி அடிக்கவோ இந்து இயக்கங்கள் இன்னும் தயார் இல்லை. ஏன் என்றால் இவர்கள் வெளியில் செய்வதை சாமியார்கள் கோவில், ஆசிரமத்தில் செய்வதால் தட்டி கேட்க பயம். எப்படி இருக்கையில் எப்படி இந்துக்களை காப்பார்கள் என்பது இறைவன் மட்டுமே அறிந்த ஒன்று
சாமிகள் அடுத்தவர் பிரச்சினையை தீர்க்க தெரிகிறது, அந்த சக்தியை பயன்படுத்தி தன்னுடைய காரியத்தை சாதிக்காமல், இப்படி முன் ஜாமின் ஏன் ? இப்போதாவது உணருங்கள் மக்களே! இவர்களும் நம்மை போன்றோரே! மனிதன் என்றுமே மனிதன் தான், இவனிடம் சென்று பணத்தை வீண் விரயம் செய்யாமல், சுதாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என ஆளாளுக்கு ஒரு சட்டம் என்றில்லாமல் ” பொது சிவில் சட்டம் ” வேண்டும் என்று தம்பட்டம் அடிக்கும் நாம் உண்மையை சற்று சிந்திக்க வேண்டும்.
ஆடை அணிந்திருக்கும் ஒருவனுக்கு புத்தாடை வழங்குவது சிறந்ததா ? அல்லது ஆடையில்லாமல் இருக்கும் ஒருவருக்கு ஆடை அணிவிப்பது சிறந்ததா ?
விருந்தோம்பல் என்ற பெயரில் வகை வகையாக உண்ணும் பணக்காரர்களை விருந்திற்கு அழைத்து விட்டு, உண்ண உணவில்லாமல் வாடும் வரியவர்கள் வந்தால் விரட்டுவது போல்தான் உண்மையில் இந்த “பொது சிவில் சட்டம் ” உள்ளது.
முதலில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்து விட்டு அதற்கு பிறகு அவர்கள் அனைவருக்கு சிவில் சட்டங்களை வகுக்க வேண்டும், அப்படி பார்த்தால் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இல்லை.
வணங்கும் கடவுளில் முதலில் ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும், உண்மையில் நமது ஹிந்து இயக்கங்கள் நம் நலனுக்காக பாடுபடுகின்றனவா ? என்பதை பார்ப்போம், அனைவரும் சமம் என்று சொல்லி சட்டம் இயற்ற சொல்லும் நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்றால், நமக்குள் முதலில் பொதுவான சிவில் சட்டம் முறைபடுத்தபட வேண்டும் என்று சொல்லும் அளவிற்குத்தான் நமது நிலை உள்ளது. நமக்குள் பொதுவான சட்டம் என்றால் என்ன ?
1] அனைத்து இந்துக்களும் எந்த கோவிளுக்கும் செல்லலாம் அவர்களை தடுக்கக் கூடாது
2] அவர்களை தடுத்து நிறுத்தினால் பி.ஜே.பி அல்லது சிவசேனா அல்லது இந்து முன்னனி சார்பில், தங்களுடைய தலைமையில் தடையை உடைத்து உள்ளே தலித்துகளை அழைத்து செல்ல வேண்டும்
3] முதலில் வருபவர்கே முதலுரிமை பார்பணரானாலும் வரிசையில் வந்தே நிற்க வேண்டும்
4] எங்களுக்குள் பிளவு இல்லை. பார்ப்பணர் மகளை தலித் திருமணம் செய்யலாம், அல்லது தலித் மகளை உயர் சாதியினர் திருமணம் செய்யலாம்
5] எங்களுக்குள் பேதம் ஏதும் இல்லை, தலித் அர்ச்சகராக நியமித்து பிராமணர்கள் பூஜை செய்ய தயார்
6] எங்களுடைய இயக்கங்களிலும், கட்சிகளிலும் தலித்களுக்கு அனைத்து மட்ட அளவிலும் பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்படும்
7] எந்த ஒரு பிரச்சனையிலும் தலித்துகளை மட்டும் களத்தில் இறக்கிவிடாமல், மேல் சாதியினர் இறங்கி களப்பணி செய்து தலித்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம்
8] மேல் சாதியினர் இறந்தால் அவர்களுக்கு செய்யும் ஈம காரியத்தில் தாழ்த்தப்பட்டோரும் பங்கேற்கலாம்
9] மேல் சதியினரும், கீழ் சாதியினரும் சரிக்கு சமமாக இருக்கைகளில் அமரலாம்
நான் மேலே குறிப்பிட்ட விசயங்கள் மிகச் சிலவே இந்த போல் ஆயிரம் உள்ளது, முதலில் ஹிந்துக்களாகிய நமக்குள் முதலில் ஒரே மாதிரியான சட்டத்தை வகுப்போம், அதற்கு பிறகு அனைவருக்கும் சேர்த்து ஒரே சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம்.
முஸ்லிம்கள் ஒரு தாழ்த்தப்பட்டவன் இஸ்லாத்தில் இணைந்தால் அவனை இமாமாக ஏற்று தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். இஸ்லாத்தில் இணைந்தவர்களுடன் தோழோடு தோழ் தழுவுகிறார்கள். பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார்கள், ஆனால் நாம் அப்படி செய்கிறோமா ?
ஆடை அணிந்திருக்கும் ஒருவனுக்கு ஏன் புத்தாடை வாங்கி கொடுக்க ஆவல் காட்ட வேண்டும், அவனுடைய மதத்தில் ஏற்றத் தாழ்வு இல்லையே!
மாறாக ஆடை இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கு ஆடை அணிவிக்க நாம் முனைவதே கிடையாது, தாழ்ந்த ஜாதி மக்களை உயர் ஜாதி மக்கள் ஏளனமாக நினைப்பதும், பெண் கொடுக்க மறுப்பதும், மிருகத்தை விட கேவலமாக நினைப்பதும் எந்த வையில் நியாயம் ?
ஆனால், மதக்கலவரங்கள் மற்றும் ஹிந்து மாநாடு போன்றவைகளில் மட்டும் நாம் தாழ்த்தப்பட்டோரை தவறாது உபயோகிக்கிறோம், ஆக நாம் செய்வது சுயநல அரசியலா ? பொது நலம் என்றால், நம் தலைமையில் இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற தொடர் போராட்டங்கள் அறிவித்தால் என்ன ? நாம் ஏன் தயங்குகிறோம், உயர் சாதி வர்க்கம் ஒட்டாது என்பதாலா ?
அல்லது தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் உயர் சாதியினர் என்பதாலா?
மனமிருந்தால் மட்டுமே மார்க்கம் உண்டாகும்!