சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அடுத்தடுத்த திருப்பங்கள் என வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 4 பெண்களின் போராட்டங்களை பற்றி பேசுகிறது.
தற்போது கதையில் தர்ஷினியை உண்மையாக யார் கடத்தியது என்ற போராட்ட கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று வெளியான புரொமோவை பார்க்கும் போது குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்துள்ளது தெரிய வருகிறது.
மதுமிதா பதிவு
இந்த தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மதுமிதா.
இவர் சமீபத்தில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாகவும், இதனால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தது.
இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட மதுமிதா தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், என்னை பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் நலமுடன் இருக்கிறேன். செய்திகளில் வரும் தவறான செய்திகளை நம்பாதீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.