விமானத்தை இடி, மின்னல் தாக்குமா?

216

விமான பயணத்தில் வானிலை முக்கியமானது. பருவமழை, பனிமூட்டம் அதிகமிருந்தால் கூட விமானங்கள் ரத்துசெய்யப்படுவது உண்டு. விபத்துக்குள்ளாகும் விமானங்களுக்கு மோசமான வானிலையையும் காரணமாய் சொல்வது உண்டு.

அப்படி இருக்கையில், இடி விழுந்தால் பூமியிலே உயிர்ச்சேதம் ஏற்படும்பொழுது, விபத்து நுட்பம் மிக்க விமனத்தில் விழுந்தால் என்னவாகும்?

இது பலருக்கு இன்னும் புலப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்லாந்தில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.

ஹால்டோர் ஹுட்மண்ட்ஸன் என்பவர் வானத்தில் அதிசயமாய் நடந்த ஒரு காட்சியை படம்பிடித்துள்ளார். அவருடை அலுவலகத்துக்கு வடமேற்கே, ஐஸ்லாந்தின் கெஃப்லாவிக் சர்வதேச விமானநிலையம் உள்ளது.

அக்டோபர் 3 ம் தேதியன்று அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற ஒரு விமானத்தின் மீது மின்னல் தாக்கியதை கண்டு பயந்தார். ஆனாலும், அதனால் விமானம் எந்த பாதிப்புக்கும் உட்படாமல் தன் பயணத்தை கனமழையிலும் தொடர்ந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

அடுத்து மற்றொரு விமானம் புறப்படும்போதும் மின்னல் தாக்கியது அதை முன்னெச்சரிக்கையாக தனது செல்போன் கமராவில் அழகாக படம்பிடித்துவிட்டார்.

அந்த விமானம் ஐஸ்லாந்தின் தலைநகரான ரிகியாவிக்கில் இருந்து பாரிஸுக்கு பத்திரமாக வந்து இறங்கியதை, விமான நிலையம், பிபிசிக்கும் தெரியப்படுத்தியது.

இந்த புகைப்படத்தை ஒரு அசாதராண காட்சி என நினைத்து, விமான நிலைய செய்தி தொடர்பாளரிடம் காட்டினார். அதைப்பர்த்த அவர் இது ஒன்றும் அசாதாராணமானது அல்ல என்றார்.

மேலும், மின்னல் விமானத்தை தாக்கினாலும் பாதிப்பு நேர்வதில்லை என்றார். அதற்கு காரணம், விமானம் பறப்பதற்கு அதற்குள் சுமார் 1 பில்லியன் ஜூல்கள் ஆற்றல் வெளிப்படுகிறது. அது கிட்டத்தட்ட கால் டன் டி.என்.டி. வெடிப்பொருளுக்கு சமமானது. என்றார்.

விமானத்தின் தோல்பகுதி மின்சாரத்தால் பாதிக்கப்படாதவாறு தகவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் பயணிகள் பகுதிக்கும் மின்கடத்தா தன்மையும் உள்ளது. அதனால் பயணிகளோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களோ மின்னல் தாக்கினாலும் பாதிக்கப்படுவதில்லை என பிரிட்டிஷ் விமான விமானிகள் சங்கத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினரும் விமானியுமான கிறிஸ் ஹேமண்ட் கூறுகிறார்.

SHARE