விரும்புகிறோம் ஆனால் லவ் இல்லை : பாவனா பாய்பிரெண்ட் பாவ்லா 

457



பாவனாவும் நானும் ஒருவரையொருவர் விரும்புகிறோம். ஆனால் காதலிக்கவில்லை என்றார் மல்லுவுட் நடிகர் அனூப் மேனன். சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பாவனா தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மல்லுவுட் நடிகர் அனூப் மேனனுக்கும் காதல் என்று திரையுலகில் கிசுகிசு பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ஆங்கிரி பேபிஸ் இன் லவ் மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். புதிய படமொன்றிலும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.

அனூப் மேனனுடன் காதலா? என்று பாவனாவிடம் கேட்டபோது, நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் சினிமா துறையில்தான் இருக்கிறார். அவர் யார் என்பதை நேரம் வரும்போது தெரிவிப்பேன் என்று சொல்லி நழுவினார். பாவனாவை காதலிக்கிறீர்களா? என்று அனூப் மேனனிடம் கேட்டபோது, நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கிறோம்.

விரும்புகிறோம். ஆனால் நாங்கள் காதல் பறவைகள் கிடையாது. நல்ல நண்பர்கள் மட்டும்தான். பாவனா அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். அந்த நபர் யார் என்பது சஸ்பென்ஸ் என்று குழப்பமாக பதில் அளித்தார்

 

SHARE