விரைவில் அறிமுகமாகின்றது HTC One M10

326
உலகின் முதற்தர கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் HTC நிறுவனம் One M10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 5.1 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இக் கைப்பேசியானது கூகுளின் Android 6.0.1 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன் Home Button உடன் கூடிய Finger Print Button  தரப்பட்டுள்ளது.

இவை தவிர 12MP அல்ட்ரா பிக்சல் உடைய அதி வினைத்திறன் வாய்ந்த கமெராவும் இணைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசி மார்ச் மாதம் விற்பனைக்கு வருகின்றது.

SHARE