ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது.
இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.
Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகிவிட்டது.
இந் நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத் தகவலை Digitimes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் தலைமுறையாக வெளிவரவுள்ள இக் கடிகாரமானது வடிவமைப்பில் முன்னைய தலைமுறையினை ஒத்திருந்த போதிலும் புதிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மேலதிக சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.