ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்போது அனைத்து விதமான துறைகளிலும் உட்புகுத்தப்பட்டு பிரபல்யமடைந்து வருகின்றது.இவ்வாறிருக்கையில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஆடைகளை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Jacquard எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள இந்த ஆடைகளுக்கு சில்க், கொட்டன், பொலியெஸ்ரர் போன்ற துணி வகைகளில் உலோக இழைகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது பற்றி கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில் “ இதே போன்ற தொழில்நுட்பம் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த போதிலும் Jacquard திட்டத்தினூடாக உருவாக்கப்படும் இத்துணிகள் குறைந்த விலையில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளது. |