தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.
முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது, இதனால் அவர் அடுத்தடுத்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன்பின் தமிழில் டாப்ஸிக்கு பெரிதாக எந்த ஒரு ஹிட் படங்களும் அமையவில்லை. ஆனால் ஆடுகளம் படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
கடைசியாக நடிகை டாப்ஸியின் நடிப்பில் டன்கி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
திருமணம்
இந்த நிலையில் நடிகை டாப்ஸியின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அவரது நீண்டகால நண்பரும், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
உதய்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறதாம்.