தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியில் ஒன்று விஜய்.
இதில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்க்கும் வகையில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மதியம் மற்றும் இரவு ஹிட் சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது.
இப்போது இந்த தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான்.
முடியும் தொடர்
தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்து முக்கிய செய்தி தான் வெளியாகியுள்ளது.
அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
தமிழ்-சரஸ்வதிக்கு குழந்தை பிறப்பதோடு எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்து தொடரும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.