தலைப்பை பார்த்தவுடனே ஜீரணிக்க முடியவில்லையா? ஆம் இது உண்மை தான்.
பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், ‘கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய உணவாக மாறலாம்’ என கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக பசுவின் பாலை விட நான்கு மடங்கு அதிக சத்து மிக்கதாக உள்ளதாகவும், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளதாகவும் ஆய்வுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
Diploptera punctate என்னும் பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களது குஞ்சுகளுக்கு உணவாக ஒரு வித பாலை சுரக்கிறது.
இதனை ஆய்வு செய்த போது தான் புரோட்டீன் படிகத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.