பிரபல கூகுள் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களை கவருவதற்கென்று புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனமானது Project Jacquard-னை அறிவித்தது. கூகுள் நிறுவனமானது Jacquard தறியின் நினைவாகவே இந்த பெயரினை சூட்டியது.
ஆடைகளை தயாரிக்கும் நூலோடு சேர்த்து, மிண்ணனு கம்பிகளையும், சிலிக்கன் சில்லுகளையும் நெய்து, அதனை ஸ்மார்ட் உடையாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
தற்போது இந்த நவீன மிண்ணனு ஆடையின் தொழில்நுட்பத்தினை பிரபல ஜீன்ஸ் நிறுவனமான Levis வாங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசினை குறைப்பதற்காக சைக்கிள் பயணிப்பவர்களை மனதில் வைத்து கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உடையானது பல்வேறு தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளது.
இந்த உடையில் ஜாக்கெட்டுக்கு உள்பக்கம் மொபைல் போனையும் வெளிப்புறம் மணிக்கட்டில் ஒரு மிண்ணனு சாதனத்தினையும் வைத்துவிட்டால், சாலையில் செல்லும் போது வழி அறிவது, பாட்டு கேட்பது, போன் கால்களை எடுப்பது போன்ற அனைத்தினையும் இதன் மூலமாக எளிதில் செய்யலாம்.
முழுவதுமாக டெனிம் துணியினால் ஆன இந்த மேலாடையின் மணிக்கட்டு பகுதியில் உள்ள இந்த மிண்ணனு சாதனத்தினை மட்டும் கழற்றிவிட்டால் துவைப்பது எளிது.