விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்- படப்பிடிப்பு தள போட்டோ இதோ

78

 

சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவிற்கு கார் வந்த சந்தோஷத்தில் அண்ணாமலை, பார்லருக்கு தனது பெயர் இல்லை என்ற கோபத்தில் விஜயா இருக்கிறார்.

கார் வாங்கி கொடுத்த மீனாவிற்கு ஆசை ஆசையாய் பூ, அல்வா வாங்கி வரும் முத்து, ஆனால் கடைசியில் அது காமெடியாக முடிந்தது.

இன்னொரு ஜோடியான ரோஹினி தனது அப்பாவிற்கு என்ன செய்வேன் என்று பெரிய குழப்பத்தில் உள்ளார்.

அண்ணாமலையை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிறைய பிளான்களுடன் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஸ்ருதியின் அம்மா. இப்படி சில காட்சிகளுடன் இந்த வார கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

புதிய போட்டோ
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நேற்று (மார்ச் 20) இந்த சீரியலின் நாயகன் முத்துவின் பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.

அதேபோல் நேற்று படப்பிடிப்பு தளத்திலும் முத்து என்கிற வெற்றி வசந்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுளளனர். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது பெரிய மண்டபத்தில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்திருப்பது தெரிகிறது.

SHARE