விற்பனையில் சாதனை படைத்தது Samsung Galaxy S5

750
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 11 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை Galaxy S4 கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்ட வேளை அக்கைப்பேசி ஒரு மாத காலத்தில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் ஒரு மில்லியன் அதிகமாகும்.

இதேவேளை உலகமெங்கிலும் 125 நாடுகளில் Galaxy S5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE