ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து சர்ச்சை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை தனுஷ் – ஐஸ்வர்யா அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் தனுஷை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த். போயஸ் கார்டனனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார் தனுஷ். அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளாராம்.
ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதே போல் தனுஷ் வீட்டார்களும், இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அவை யாவும் கூட பலன் தரவில்லை. இதன்பின் தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டுள்ளனர்.