வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி

317
ரோட்டுக்கடை முட்டை கலக்கி... வீட்டிலேயே செய்யலாம் வாங்க...

ரோட்டுக்கடை முட்டை கலக்கி
தேவையான பொருட்கள் :

முட்டை – 2
மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – சிறிது
சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா – 2 கரண்டி
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.

பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும்.

நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான முட்டை கலக்கி ரெடி!

SHARE