2k கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
சமந்தா, திருமண முறிவுக்கு பிறகு தனது கேரியரில் தீவிர கவனம் செலுத்திவந்த நிலையில் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.
2ம் திருமணம்
இந்த நிலையில் சமந்தாவின் இரண்டாம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது வீட்டில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தங்களது நெருங்கிய உறவினர் பையன் ஒருவரையே சமந்தாவுக்கு மாப்பிள்ளையாக்கும் வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.