வீட்டுக்கு தீ வைத்த தந்தை: 2 வயது மகள்பலி

646
 

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிபஹல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக்கு தீ வைத்து இரண்டு வயதானான தனது மகளை கொலை செய்தமை மற்றும் மனைவி உள்ளிட்ட மூவருக்கு தீ காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குழந்தையின் தந்தையை (வயது 27) எதிர்வரும் 17 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக சந்தேகநபர், குடும்பத்தை விட்டு சிலகாலம் பிரிந்து இருந்ததாகவூம் மீண்டும் வீட்டுக்கு நேற்றிரவூ வந்த அவர், பெற்றௌல் ஊற்றி வீட்டை கொளுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE