வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

181

 

நாளுக்கு நாள் அதிநவீன தொழில்நுட்பம் வந்துகொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் கார்கள் உற்பத்தி எளிதாகி வருகிறது.

முன்னதாக ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரித்த நிறுவனங்கள் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளன.

அடேங்கப்பா இவ்வளவு விலையா?
அந்த வரிசையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ‘Maruti Suzuki’ முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஜப்பானின் தாய் நிறுவனமான சுசூக்கியுடன் (Suzuki) இணைந்து Electric Air Copter-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ‘எலக்ட்ரிக் ஏர் காப்டரில்’ விமானியுடன் மூன்று பயணிகள் பயணம் செய்யலாம்.

இந்த ‘எலக்ட்ரிக் ஏர் காப்டர்கள்’ இது ட்ரோன்களை விட பெரியது மற்றும் வழக்கமான ஹெலிகாப்டர்களை விட சிறியது.

எலக்ட்ரிக் ஏர் காப்டரின் எடை வழக்கமான ஹெலிகாப்டரில் பாதி, அதாவது 1.4 டன். இந்த அளவிற்கு எடை குறைவாக இருப்பதால், அதனை வீட்டின் மொட்டை மாடியில் தரையிறக்கலாம் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த ‘எலக்ட்ரிக் ஏர் காப்டரை’ உருவாக்கும் பணியில் மாருதி சுசூக்கி ஈடுபட்டுள்ளது.

முதலில் ஜப்பான், பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியா சந்தையில் மின்சார ஏர் காப்டர்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சாலையில் Uber மற்றும் Ola Cab சேவைகளைப் போலவே, மாருதி சுஸுகியின் ‘எலக்ட்ரிக் ஏர் காப்டர்கள்’ விமான டாக்ஸிகளாகப் பயன்படுத்தப்படலாம்.

இந்த செயல்முறை வெற்றியடைந்தால், பொதுப் போக்குவரத்தில் புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஏர் காப்டர்களை இந்திய சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த உற்பத்தி செலவில் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் Maruti Suzuki ஆர்வம் காட்டி வருகிறது.

சுசுகி மோட்டார் குளோபல் ஆட்டோமொபைல் திட்டமிடல் துறையின் உதவி மேலாளர், கென்டோ ஓகுரா, இந்தியாவில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உண்மையான நிலைமைகளை ஆய்வு செய்ய விமானப் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டாளரான ‘DGCA ‘ உடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.

மாருதி சுஸுகி தனது எலக்ட்ரிக் ஏர் காப்டருக்கு ‘ஸ்கை டிரைவ்’ (SkyDrive) என்று பெயரிடவுள்ளது.

இது 2025-ஒசாகா எக்ஸ்போவில் 12 யூனிட் மோட்டார்கள் மற்றும் ரூட்டர்களுடன் காட்சிப்படுத்தப்படும். இது முதலில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விற்கப்படும். ஆனால், ‘Make In India’ திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மின்சார விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.

இந்த மின்சார ஏர் காப்டரின் மின்மயமாக்கலின் மூலம், அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் கணிசமாகக் குறையும். உற்பத்திச் செலவு, பராமரிப்புச் செலவும் குறையும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டது.

SHARE