பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் பிசியாக நடிகையாக மாறியுள்ளார் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் போன்ற நடிகர்களின் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. அசர்பைஜானில் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு சென்றது என்பதை நாம் அறிவோம்.
காத்திருக்கும் அஜித்
இதன்பின் சில காரணங்களால் படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை. இதனால் விடாமுயற்சி படத்திற்காக திரிஷா கொடுத்த கால்ஷீட் வீணாக போய்விட்டதாம். இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இதில் அஜித் மற்றும் விடாமுயற்ச்சி படக்குழு, திரிஷாவின் கால்ஷீட் கிடைக்காமல் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
திரிஷா தற்போது சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் படங்களின் பிசியாக நடித்து வருவதன் காரணமாக, விடாமுயற்சி படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கமுடியவில்லையாம். அதே போல் ஏற்கனவே கொடுத்த கால்ஷீட் வீணாக போனதும் திரிஷாவை அப்சட் செய்துள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.