வீதி புனரமைப்பின் போது இரு நிலக்கண்ணிவெடிகள் அடையாளம்

297

கிளிநொச்சி – முரசுமோட்டை, ஐயன் கோயிலடி கிராமத்தில் வீதி புனரமைப்பின் போது இரு நிலக்கண்ணிவெடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனினும் இதுவரையில் குறித்த ஆபத்தான வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் தாம் அச்சத்துடன் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,

வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் குறித்தவெடி பொருட்களை பாதுகாப்பற்ற ஓரிடத்தில் வைத்துள்ள நிலையில் குறித்த வீதியை இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதுகாப்பற்ற வகையில் போடப்பட்டுள்ள மேற்படி வெடிபொருளால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

SHARE