வீரம் விளைந்த மண்ணில் கோழைகளின் முடிவுகள்

512

தமிழினம் தலைநிமிர செய்த கல்விமான்கள் தோன்றிய மண்ணில் உலகமே திரும்பிப் பார்க்க வைத்த வீரம் செறிந்த மண்ணில் உலகிலே தமிழினத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்த மண்ணில் கோழைகளின் முடிவுகள் ஏன் இந்த துயர்? யார் கொடுத்த சாபம்? தமிழினமே விழித்துக்கொள்.

ஆம் 30 வருடங்கள் போரினால் பல இலட்சம் இளம் தலைமுறைகள் அழிந்து போய் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வாழும் இளம் தலைமுறை சாதிக்கும் என எண்ணிய பொழுது இளம் குருத்துக்கள் சருகாய் மடிகின்றதே. ஏன் இந்த அவலம் அண்மைக் காலமாக செய்திகளில் வரும் மரணங்கள் கடன் பிரச்சனை நுண்கடன் பிரச்சனை குடும்ப பிரச்சனை எதிர்பார்த்த பரீட்சை முடிவுகள் கிடைக்கவில்லை என்று காதல் தோல்விகள் என்று தற்கொலைகள் மலிந்து போன மண்ணாக யாழ் மண் வன்னி மண் சருகாய் மடியும் குருத்துக்களின் வயது 16 அகவை தொடக்கம் 30 அகவைக்குள் முடிகின்றதே இதற்கெல்லாம் காரணம் என்ன தற்துணிவு அற்ற சுயநலமான கோழைத்தனமான சிந்தனைகளே ஆகும்.

பிரச்சனைகளுக்கு மரணம் தான் முடிவல்ல இதற்கு யாரெல்லாம் பொறுப்பு பெற்றோர் உறவுகள், கல்விமான்கள், சமுதாயம், சமய தலைவர்கள் ஒட்டுமொத்த எல்லோரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களே. யாழில் இடம் பெற்ற தற்கொலைகளின் செய்திகளை பார்ப்போமானால் திருமணம் முடித்து இரண்டு மாதமான பெண் வயது 17 கணவருடன் முரண்பட்டு தற்கொலை, கணவரின் குடியினால் கருத்து முரண்பாடுபட்டு 30 வயது குடும்ப பெண் தற்கொலை, காதல் பிரச்சனையால் பெற்றோருடன் முரண்பட்டு கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை, வயது 28 சில நாட்களுக்கு முன் காதலி தற்கொலை விரக்தியில் காதலன் தற்கொலை, வயது 26 நுண்கடன் பிரச்சனை குடும்பபெண் 2 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை, எதிர்பார்த்த பரீட்சை முடிவுகள் கிடைக்காததால் O/L மாணவி தற்கொலை, இவ்வாறான தற்கொலை முடிவுகள் தற்துணிவற்று கோழைத்தனமாக எடுத்த முடிவுகள் இதனை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் உடனடியாக செயற்பட வேண்டும். முக்கியமாக கிராம மட்டங்களில் இதனை முன்னெடுக்க வேண்டும். தற்கொலை செய்யும் இளம் தலைமுறையினர் தங்கள் பிரச்சனைகளை யாரிடமும் கூற முடியாமல் மனதில் வைத்து அழுத்தம் உண்டாக்கி இவ்வாறான முடிவுகளுக்கு செல்லுகின்றனர். பெற்றோர் தம் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் தாங்களே முடிவெடுப்பார்கள் என எண்ணி வருவது மிகவும் பாரதூரமான முடிவுக்கு இட்டு செல்லுகின்றது. இளம் தலைமுறையினர் தங்கள் பிரச்சனைகளை பெற்றோருக்கோ அல்லது தங்கள் நம்பிக்கையினரிடமோ தெரிவித்து அதற்கான சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். தாங்கள் தற்கொலை செய்வதுடன் தாம் சார்ந்த உறவுகளையும் மிகத்துயரில் ஆழ்த்தி செல்லுகின்றனர். இளம் தலைமுறையே உங்களிடம் ஒன்றை வேண்டி நிற்கின்றோம். வீரர்களாய் வாழா விட்டாலும், கோழையாய் மரணிக்காதீர்கள்.

SHARE