வெடித்து சிதறும் ஆப்பிள் ஐபோன்கள்

233

ல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அதிகமாக வெப்பமடைதல் மற்றும் மின்சார குறுஞ்சுற்றுக்கள் என்பவற்றினால் அவ்வப்போது வெடித்து சிதறுகின்றன.

எனினும் இவற்றில் அதிகளவு பாதிப்புக்குள்ளாவது ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் கைப்பேசிகள்தான்.

கடந்த வருடம் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்த Note 7 கைப்பேசிகள் அதிகளவில் வெடிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து அந்நிறுவனம் விற்பனைக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து கைப்பேசிகளையும் திரும்பப்பெற்றிருந்தது.

இதனால் பல கோடிகள் நஸ்டமடைய வேண்டிய நிலைக்கு சாம்சுங் நிறுவனம் தள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆப்பிளின் iPhone 7 Plus கைப்பேசிகளும் வெடிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது குறித்த கைப்பேசிகள் வெடிப்பதற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது ஆப்பிள்.

உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான iPhone 7 Plus கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றினை மீளப் பெறுவது சாத்தியமற்றதாகும்.

எனவே வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து மாற்றுத் தீர்வு ஒன்றினை ஆப்பிள் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE