வெடித்து சிதறும் ஐபோன்கள்! மீண்டும் நடந்த உண்மை சம்பவம்

204

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்ததால் உற்பத்தியை தற்காலிகமாக சாம்சங் நிறுத்தியுள்ளது.

இதேபோன்று ஆப்பிள் ஐபோன்களும் வெடிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய ஐபோன் 7 வெடித்ததில் தீக்காயமடைந்ததாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், சமீபத்தில் புதிதாக ஆப்பிள் ஐபோன் 7-யை வாங்கியதாகவும், சார்ஜ் செய்து கொண்டே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வலியை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கண்விழித்து பார்த்த போது ஐபோன் வெடித்து சிதறியதுடன் கையில் காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே யாரும் சார்ஜ் செய்து கொண்டே உறங்கிவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE