வெப் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

522

குளோபல்தமிழ்ச்செய்தியாளர்

வெப்ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு  ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் நேற்று ஆரம்பமாகவிருந்த    வெப் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு  ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்சார் வெப் ஊடகவியலாளர் சங்கம் நீர்கொழும்பு ராணி பீச் ஹோட்டலில் நடாத்தவிருந்த செயலமர்வே இவ்வாறு மிரட்டல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை  ஹோட்டல் நிர்வாகத்திற்க்கு குறிப்பிட்ட செயலமர்வில் சனல்4 ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளப்போவதாகவும், அதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தொலைபேசி  அழைப்பு வந்ததாகவும்,இதன் காரணமாக அச்சமடைந்த அவர்கள் செயலமர்விற்க்கு அனுமதிவழங்க மறுத்துத்தாகவும் தெரியவருகின்றது.

குறிப்பிட்ட ஹோட்டல் முகாமையாளர் ஏற்பாட்டாளர்களை சந்தித்து வினவியதாகவும்,இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது- இதன் பின்னர் குறிப்பிட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திலிருந்து மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட செயலமர்வை நிறுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  சிவில் உடையில் குறிப்பிட்ட ஹோட்டலிற்க்குள் வந்த சனல்4 துரோகிகள் சிலர் நுழைந்திருப்பதாகவும், இதனால் குறிப்பிட்ட செயலமர்வை நிறுத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறான சூழலில் செயலமர்வு வேறு இடத்தில் நடைபெறுவதாகவும் தெரியவருகின்றது

SHARE