ரியல்மி (realme) நிறுவனம், அதன் முதல் Note சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான Realme Note 50 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
Realme Note 50
Realme Note 50 ஸ்மார்ட் போனை ரியல்மி குறைந்த விலையில் வழங்க முடிவு செய்ததால் இதனை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் ஜனவரி 23 -ம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த Realme Note 50 ஸ்மார்ட்போன் ஆனது 6.74″ inch 1600 x 720 pixels கொண்ட HD+ IPS LCD டிஸ்பிளேவை வழங்குகிறது. இதில் உள்ள ரெஃப்ரஷ் ரேட் 90Hz வரை திறன் கொண்டது.
அதுமட்டுமல்லாமல், 2TB வரையிலான externel storage ஆதரவை microSD வழியாக வழங்குகிறது. Android 13 ரியல்மி UI T எடிஷன் உடன் இயங்குவது மட்டுமல்லாமல் Dual Nano SIM card -களை ஆதரிக்கிறது.
இதன் கேமராவை பொறுத்தவரை 13MP rear camera, B&W டெப்த் சென்சார், LED flash, 5MP selfie camera ஆகியவை உள்ளன. அதோடு 3.5 Audio jack மற்றும் 5000mAh பேட்டரி உடன் 10W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய Realme Note 50 ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் இப்போது அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய மதிப்பின் படி, ரூ.5,400 என்ற விலையை பெரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து பிற நாடுகளிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும்.