Electric Two wheeler பிராண்டான e-Sprinto நிறுவனம் நவம்பர் 22-ம் திகதி அன்று Rapo மற்றும் Roamy Electric Scooter-களை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவை பொறுத்த வரை இந்த Rapo மற்றும் Roamy என இரண்டு இரு சக்கர Electric Scooter-களின் விலை ரூ.54,999 மற்றும் ரூ.62,999 என்ற மலிவான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பயணிகள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
நீளம் 1840, அகலம் 720 மற்றும் உயரம் 1150 மிமீ பரிமாணங்களுடன், Rapo 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது.
கையடக்க Auto cutoff charger கொண்ட Lithium/Lead battery IP65 நீர்ப்புகா மதிப்பீட்டில் 250W BLDC Hub மோட்டாரை இயக்குகிறது.
Rapo-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25km மற்றும் முழு சார்ஜ் செய்தால் 100km மைலேஜ் வரை செல்லும்.
Front disc brake 12inch Rim மற்றும் Rear drum brake 10inch Motor பாதுகாப்பை உறுதி செய்கிறது, மேலும் இது 150 கிலோ ஏற்றும் திறன் கொண்டது.